டாஸ்மாக்கை அகற்றக்கூடாது மதுப்பிரியர்கள் கலெக்டரிடம் மனு
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், செவிலிமேடு அருகே உள்ள பாக்கியலட்சுமி நகரில், 4188 எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.இந்த கடையால், பல்வேறு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாகவும், மது அருந்திவிட்டு அருகில் உள்ள குடியிருப்புகளில், மதுப்பிரியர்கள் பிரச்னை செய்வதாகவும்,பல்வேறு புகார்கள் எழுந்தபடி உள்ளன.இந்நிலையில், இக்கடையை இடமாற்றம் செய்யக்கூடாது என, மதுப்பிரியர்கள் பலரும், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தால் பரபரப்பு ஏற்பட்டது.வழக்கமாக, டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, பலரும் மனு அளிக்க, கலெக்டர் அலுவலகம் வரும் நிலையில், டாஸ்மாக் கடையை அகற்ற கூடாது என, குடிமகன்கள் பலரும் வந்ததால், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்குவதால், மதுபான பாட்டில்கள் வாங்க வசதியாக இருப்பதாகவும், இக்கடையை மாற்றக்கூடாது எனவும், மதுப்பிரியர்கள் தெரிவித்தனர்.எங்கள் பகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள், இக்கடையை மாற்ற முயற்சிப்பதாகவும், கடையை மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.