உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டூ - வீலரில் மதுவிற்றவர் சிக்கினார்

டூ - வீலரில் மதுவிற்றவர் சிக்கினார்

திருத்தணி:திருத்தணி, இந்திரா நகர் பகுதியில், ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருத்தணி போலீசார் இந்திரா நகரில், நேற்று சோதனை செய்த போது, இருசக்கர வாகனத்தில் இருந்து மதுபாட்டில்கள் எடுத்து விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த பழனி, 46, என்பவரை, கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த, 17 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை