மேலும் செய்திகள்
திருவள்ளூரில் ஜன.4ல் சைக்கிள் போட்டி
29-Dec-2024
திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும், ஜன., 5ம் தேதி, ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்துார ஓட்டப்பந்தய போட்டி நடக்கிறது.மேலும் 17 - 25 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் - 8 கி.மீ., பெண்கள் - 5 கி.மீ துாரம்; 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 10 கி.மீ., பெண்கள் 5 கி.மீ துாரம் ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர், வரும் 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சேதுராஜனை, 74017 03482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
29-Dec-2024