உள்ளூர் செய்திகள்

லாரி டிரைவர்  பலி

கும்மிடிப்பூண்டி: வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத், 59. லாரி டிரைவர். இம்மாதம், 2ம் தேதி, லாரியில் கரி மூட்டைகள் ஏற்றிக் கொண்டு கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இருந்து, சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். கவரைப்பேட்டை அடுத்த, பண்பாக்கம் கிராமம் அருகே, லாரியை நிறுத்தி, லாரி மீது ஏறி, தார்ப்பாய் கயிற்றை சரி செய்துக் கொண்டிருந்தார்.அப்போது, தவறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று, உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை