மேலும் செய்திகள்
பழவேற்காடில் 30ம் தேதி கடலில் மீன்பிடிக்க தடை
28-Jul-2025
பழவேற்காடு, வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, 'பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டாம்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், வங்காள விரிகுடா கடற்கரையையொட்டி, பழவேற்காடு, எண்ணுார் உள்ளிட்ட பல்வேறு மீனவ பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு, 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், வடஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரங்களை ஒட்டி, வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால், கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும். அசம்பாவிதங்களை தவிர்க்க, 'இன்று கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்' என, திருவள்ளூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கடிதம், அனைத்து கிராம நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
28-Jul-2025