உள்ளூர் செய்திகள்

ஆண் உடல் மீட்பு

ஆர்.கே.பேட்டை:புதுார் மேடு கிராமத்தில் உள்ள தோப்பில் ஆண் உடல் மீட்கப்பட்டது.ஆர்.கே.பேட்டை விடியங்காடு ஊராட்சிக்கு உட்பட்டது புதுார் மேடு கிராமம். இந்த கிராமத்தை ஒட்டி யூகலிப்டஸ் மர தோப்பு உள்ளது. இந்த தோப்பில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, வி.கே.பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார், சடலத்தை கைப்பற்றி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சடலமாக கிடந்தவர் புதுார் மேடு கிராமத்தை சேர்ந்த ராஜா, 50, என தெரிந்தது. உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், தினமும் மது அருந்தி வந்துள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி