உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது

திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது

மதுரவாயல், திருமணம் செய்வதாக கூறி, பெண்ணை ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர். மதுரவாயலை சேர்ந்த 25 வயது பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 2019ல் கல்லுாரியில் படிக்கும் போது நண்பராக பழகிய ஹர்ஷவர்தன், 25, என்னை காதலித்தார். திருமணம் செய்வதாக கூறி, பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார் . பின், 2024 நவ., 3ம் தேதி, இரு வீட்டாரும் அழைத்து பேசி, இரு ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்வதாக கூறினார். இதை நம்பி, 2025 செப்., 25ம் தேதி, எனது வீட்டில் என்னுடன் உல்லாசமாக இருந்தார். பின், அவரை தொடர்புகொள்ளும் போது, என்னிடம் பேசுவதை தவிர்த்தார். இதுகுறித்து கேட்டால், என்னை திருமணம் செய்ய மறுத்து மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார், விருகம்பாக்கம், வெங்கடேசா நகரை சேர்ந்த ஹர்ஷவர்தனை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை