உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மதுபாட்டில் பதுக்கியவர் கைது

மதுபாட்டில் பதுக்கியவர் கைது

திருத்தணி:வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்று வந்தவரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி ஒன்றியத்தில், சிலர் டாஸ்மாக் கடையில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்று, கூடுதல் விலைக்கு விற்று வந்தனர். இதுகுறித்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார், திருத்தணி அடுத்த மத்துார் பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், 45, என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி