மேலும் செய்திகள்
குறிஞ்சிப்பாடி அருகே குட்கா விற்றவர் கைது
12-Sep-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே மளிகை கடையில் மது விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே சாலை கிராமத்தில், மளிகை கடையில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் நேற்று, சாலை கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள மளிகை கடையில் மது விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ஒன்பது மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சாலை கிராமத்தை சேர்ந்த ரகு, 48, என்பவரை கைது செய்தனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
12-Sep-2025