வாலிபரை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
மப்பேடு:வாலிபரை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அடுத்த நரசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார், 27. இவர் கடந்த 10ம் தேதி இரவு வீட்டிலிருந்து கடைக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜூ , 33 என்பவர் முன்விரோதம் காரணமாக அஜித்குமாரை ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். இதையடுத்து அஜித்குமார் தன் தாயுடன் ராஜூ வீட்டிற்கு சென்று தட்டி கேட்டுள்ளார். ராஜூ மற்றும் அவரது தந்தை சுகுமாறன், 58 ஆகியோர், ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து அஜித்குமாரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அஜித்குமார் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்படி மப்பேடு போலீசார் ராஜூவை நேற்று கைது செய்தனர். போதை நபர் கைது திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுண் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன், 52. இவர் திருவள்ளூர் நகராட்சி அருகில் காய், கனி கடை வைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 10ம் தேதி இரவு, இவரது மகன் சிவானந்த கண்ணன், 25 என்பவரை, காய்கறி சப்ளை செய்ததற்கான பணத்தை வசூல் செய்து வருமாறு அனுப்பி வைத்துள்ளார். ராஜாஜிபுரம், ஜீசஸ் ஸ்டோர் என்ற கடையில், கடை உரிமையாளரிடம் காய்கறி சப்ளை செய்ததற்கான பணத்தை சிவானந்த கண்ணன் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த தீனா, 29, என்பவர் முன்விரோதம் காரணமாக, இரும்பு ராடால், சிவானந்த கண்ணனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த சிவானந்த கண்ணன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்படி தீனாவை நேற்று திருவள்ளூர் நகர போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.