மேலும் செய்திகள்
ஆம்னி பஸ் மோதி கார் ஓட்டுநர் பலி
17-Aug-2025
கும்மிடிப்பூண்டி:தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றவர், இருசக்கர வாகனம் மோதி பலியானார். ஆந்திர மாநிலம், சத்தியவேடு அருகே, மதனமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 42; லாரி ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு, கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் பகுதியில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம் லாரியை நிறுத்தி, பஞ்சர் கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கே.டி.எம்., இருசக்கர வாகனம், அவர் மீது மோதியது. இதில், படுகாய மடைந்த சந்திரசேகர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.
17-Aug-2025