உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியவர் போலீசில் புகார்

 கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியவர் போலீசில் புகார்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த கல்லாமேடு அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் சுதாகர், 42. நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், ரங்கய்யபள்ளியைச் சேர்ந்த சேகர், 42, வெங்கடேசன், 25, ஆகியோர், சுதாகரின் வீட்டிற்கு வந்தனர். துாங்கிக்கொண்டிருந்த சுதாகரை, இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றனர். ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்தி, சுதாகரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த சுதாகர், புத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக, சேகர் மற்றும் வெங்கடேசனை பள்ளிப்பட்டு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், சேகருக்கும், சுதாகருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி