உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கால்வாய் மதகு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர், நீரில் முழ்கி உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி கங்கன்தொட்டியில் வசித்தவர் சந்திரன், 40. நேற்று மாலை, ஈகுவார்பாளையம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள உபரிநீர் கால்வாய் மதகு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஆழம் தெரியாமல் இறங்கிய போது, தவறி விழுந்து நீரில் முழ்கி உயிரிழந்தார். உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ