மேலும் செய்திகள்
ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
11-Mar-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத கல்வி மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது.கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கு மாற்றாக, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை பயன்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த மூன்று பள்ளிகள், மூன்று கல்லுாரிகள் மற்றும் மூன்று வணிக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும்.முதல் பரிசாக, 10 லட்சம், இரண்டாம் பரிசாக 5 மற்றும் மூன்றாம் பரிசாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்விருது பெற www.tntiruvallurawards.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும், விண்ணப்ப நகலுடன், இரண்டு அச்சு பிரதி இணைத்து, கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை, மே 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
11-Mar-2025