மேலும் செய்திகள்
பயன்பாடில்லாமல் வீணாகி வரும் அங்கன்வாடி மையம்
04-Jul-2025
மப்பேடு:மப்பேடில், 50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால், 'குடி'மகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில், 50 லட்சம் ரூபாயில் சமுதாய நலக்கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.கடந்த 2019ம் ஆண்டு மப்பேடு கால்நடை மருத்துவமனை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, 2020ல் பணிகள் துவக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த கட்டுமான பணி, மூன்று மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், 'குடி'மகன்கள் மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, சமுதாய நலக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
04-Jul-2025