உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  விடுதி மாணவர்களுக்கு பள்ளியிலேயே உணவு: கலெக்டர் அதிரடி உத்தரவு கலெக்டர் அதிரடி உத்தரவு

 விடுதி மாணவர்களுக்கு பள்ளியிலேயே உணவு: கலெக்டர் அதிரடி உத்தரவு கலெக்டர் அதிரடி உத்தரவு

பள்ளிப்பட்டு: அரசு பள்ளி மாணவர்கள், மதிய உணவுக்காக விடுதிக்கு சென்று வருவது குறித்து, நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், நேற்று ஆய்வு செய்தார். பள்ளிப்பட்டு ஒன்றியம் பொம்மராஜிபேட்டையில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, கீளப்பூடி, ஸ்ரீகாவேரிராஜிபேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள், அருகே உள்ள மாணவர் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த மாணவர்கள், மதிய உணவு இடைவேளையின் போது, உணவருந்த மீண்டும் விடுதிக்கு சென்று வருகின்றனர். போதிய கால அவகாசம் இல்லாததால், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் லிப்ட் கேட்டு பயணிக்கின்றனர். இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கலெக்டர் பிரதாப் நேற்று பொம்மராஜிபேட்டை அரசு மாணவர் விடுதி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். இதில், பள்ளிப்பட்டு வட்டாட்சியர் பாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் அற்புதராஜ் உள்ளிட்டோர் இருந்தனர். மாணவர்களுக்கு பள்ளியிலேயே மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்ய வட்டாட்சியர் பாரதிக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். வி டுதி மாணவர்களுக்கு பள்ளியில் உணவு வழங்க ஒருவரை நியமிக்கவும் ப ரிந்துரை செய்தார். மதிய உணவுக்காக மாணவர்கள், வாகனங்களில் லிப்ட் கேட்டு பயணிப்பதால், அதிருப்தியில் இருந்த பெற்றோர் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை