உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மெட்ரோ வுக்கு உயரிய விருது

 மெட்ரோ வுக்கு உயரிய விருது

சென்னை: சென்னையில் இயக்கப்படும் மெட் ரோ ரயில் சேவை, பயணியருக்கான போக்குவரத்து சேவையில் முக்கிய பங்காற்றுகிறது. இதனால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் திற்கு, 'உலகளவில் நிலையான நகர்ப்புற போக்குவரத்துக்கான - 2025'ம் ஆண்டின் சிறந்த திட்டத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த உயரிய விருது, உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில், டில்லியில் நடந்த உலகளாவிய நிலையான வளர்ச்சி உச்சி மாநாட்டில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம், இம்மாதம் 20ல் வழங்கப்பட்டுள்ளது. விருதை பெற்று வந்த அதிகாரிகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்திக்கிடம், விருதை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்