உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களை கடித்த குரங்குகள் பிடிப்பு

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களை கடித்த குரங்குகள் பிடிப்பு

திருத்தணி,முருகன் மலைக்கோவிலில் பக்தர்களை கடித்த குரங்குகளை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். திரு த்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். இங்கு, 70க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. பக்தர்கள் பூஜை செய்வதற்காக தேங்காய், வாழைப்பழம் கொண்டு செல்லும் போது, அவற்றை குரங்குகள் வழிமறித்து பிடிங்கி செல்கின்றன. சில நேரங்களில் பக்தர்களை விரட்டி கடித்து வருகிறது. நேற்று முன்தினம், இரு போலீசார் உட்பட ஐந்து பக்தர்களை குரங்கள் கடித்தன. ஒரு மாதத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட பக்தர்களை குரங்குகள் கடித்துள்ளன. இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் ஒன்றிணைந்து, குரங்குகள் அதிகளவில் உலா வரும் இடத்தில் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்தனர். நேற்று ஒரே நாளில், 20 குரங்குகளை பிடித்து, வனத்துறையினர் வேன் மூலம் ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனர். தொடர்ந்து, குரங்குகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை