உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மகன் இறப்பில் சந்தேகம் தாய் போலீசில் புகார்

மகன் இறப்பில் சந்தேகம் தாய் போலீசில் புகார்

கடம்பத்துார்:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ், 38; வெல்டிங் பணி செய்து வரும் இவருக்கு, 2018ல், கடம்பத்துார் ஒன்றியம், சிற்றபாக்கம் பகுதியைச் சேர்ந்த தீபா என்பவருடன் திருமணமாகி, 4 வயதில் மகன் உள்ளனர்.அடிக்கடி கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டதால், தீபா தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில், தற்போது, பிரேம்ராஜ் தன் பெற்றோர் வீட்டை விற்று கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு சிற்றம்பாக்கத்தில் வீடு பார்த்து தீபாவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.கடந்த 18ம் தேதி காலை, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப்பின் மாலையில் வீடு திரும்பியுள்ளார். பின், அன்றிரவு 8:00 மணியளவில் பிரேம்ராஜ் திடீரென உயிரிழந்துள்ளார்.தகவலறிந்த கடம்பத்துார் போலீசார், சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து இவரது தாய் ஜோதி, 54, என்பவர் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி