உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூன்று குழந்தைகளுடன் தாய் மாயம்

மூன்று குழந்தைகளுடன் தாய் மாயம்

புல்லரம்பாக்கம்:திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அமித்பாஷா, 56. இவரது மகள் அல்மாஸ், 39. இவருக்கு, 15 ஆண்டுகளுக்கு முன் சாதிக், 45, என்பவருடன் திருமணமாகி, 12 வயது ஆண் மற்றும் 9, 4 வயதில் பெண் குழந்தைகள் உள்ளன.கணவர் மற்றும் குழந்தைகளுடன் அல்மாஸ் தன் தந்தையுடன் வசித்து வருகிறார்.கடந்த 6ம் தேதி இரவு, தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மூன்று குழந்தைகளுடன் அல்மாஸ், வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து, அமித்பாஷா நேற்று முன்தினம் அளித்த புகாரையடுத்து, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை