உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாலத்தில் வளரும் செடிகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

பாலத்தில் வளரும் செடிகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

மீஞ்சூர்:மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் உள்ள பாலத்தில் வளர்ந்துள்ள செடிககளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக் கை விடுத்துள்ளனர். மீஞ்சூர் - வண்டலுார் இடையே, 62 கி.மீ.,க்கு வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இச்சாலையில், மீஞ்சூர் அருகே உள்ள சீமாவரம் கிராமத்தில் கொற்றலை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. அந்தப் பாலம் தற்போது பராமரிப்பின்றி உள்ளது. பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் உள்ள கான்கிரீட் கட்டுமானங்களில் அதிகளவில் செடிகள் வளர்ந்துள்ளன. மரம், செடிகளால் கான்கிரீட் கட்டுமானங்கள் சேதமடைந்து, பாலம் பலவீனம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எண்ணுார் துறைமுகம், அத்திப்பட்டில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பாலத்தின் வழியாக சென்று வருகின்றன. இச்சாலையில், ஐந்து இடங்களில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், பாலம் மற்றும் சாலைகளில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை