உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விரிவாக்கம் செய்யாத பாலம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

விரிவாக்கம் செய்யாத பாலம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பள்ளிப்பட்டு:சாலை விரிவாக்கத்திற்கு ஏற்ப பாலம் அகலப்படுத்தாததால், விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூர்பேட்டையில் இருந்து கோணசமுத்திரம் வழியாக அத்திமாஞ்சேரிபேட்டைக்கு சாலை செல்கிறது. கடந்த 2015ல், இருவழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.இதனால், வாகனங்கள் எளிதாக சென்று வந்தன. ஆனால், இச்சாலையில் குறுக்கிடும் சிறுபாலங்கள் விரிவாக்கம் செய்யப்படாமலும், பாலத்தின் தடுப்புச்சுவர்களின் உயரத்தை அதிகரிக்காமலும் இருப்பதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.இச்சாலையின் அகலத்தை விட 1 மீட்டருக்கும் கூடுதலாக பாலம் விரிவாக்கம் செய்ய வேண்டும். ஆனால், இப்பகுதியில் சாலையை விட பாலத்தின் அகலம் குறைவாக உள்ளது. பாலம் உள்ள பகுதியில் மட்டும் சாலை குறுகலாக உள்ளது. மேலும், இப்பாலத்தின் தடுப்புச்சுவர்களும் தரைமட்டத்திற்கு இணையாக உயரம் குறைவாக உள்ளது. இதனால், அவற்றில் பாலம் குறித்த எச்சரிக்கை பலகை அமைக்க முடியாத நிலை உள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். எனவே, பாலத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ