உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரவில் கால்நடைகள் உலா அச்சத்தில் வாகன ஓட்டிகள்

இரவில் கால்நடைகள் உலா அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் ரயில்வே மேம்பாலம் முதல் பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலம் வரையிலான, கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோரம் ஏராளமான காய்கறி, பழக்கடைகள் இயங்கி வருகின்றன.அந்த கடைகளை வைத்திருப்போர் அழுகிய காய்கறி மற்றும் பழ கழிவுகளை, சாலையோரம் குவித்து வருகின்றனர். அதை உண்பதற்காக, மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை இரவு நேரத்தில் அவிழ்த்து விடுகின்றனர்.இதனால், இரவு நேரத்தில் ஆங்காங்கே கூட்டமாக மாடுகள் சுற்றித் திரிவதும், ஜி.என்.டி., சாலையில் இளைப்பாறுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.ஜி.என்.டி., சாலையில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, மாநில நெடுஞ்சாலை துறையினர், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், பெத்திக்குப்பம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், இரவு நேரத்தில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை