உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வர்ணம் இன்றி வேகத்தடைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

வர்ணம் இன்றி வேகத்தடைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை பகுதியில் மேம்பாலத்தின் கீழ் இணைப்பு சாலை உள்ளது. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த 2 கி.மீ., இணைப்பு சாலையில், முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில், 10க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன. அனைத்து வேகத்தடைகளும் கண்களுக்கு புலப்படாத வகையில் வர்ணம் இன்றி காணப்படுகின்றன.அப்பகுதியில் வேகத்தடை இருப்பதற்கான எச்சரிக்கை பலகையும் இல்லை. இதனால், வேகத்தடை இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போகின்றனர். அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் அனைவரும் விபத்து அச்சத்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, கவரைப்பேட்டையில் உள்ள வேகத்தடைகள் அனைத்திலும் வர்ணம் அடித்து, ஒளிரும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி