மேலும் செய்திகள்
போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி
16-Aug-2025
கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், பால சீரமைப்பு பணிகள் முடங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த வேர்க்காடு பகுதியில், பாலம் அமைந்துள்ளது. பாலத்தின் குறுக்கே, ஆந்திர மார்க்கத்தில் உள்ள இணைப்புகள் சேதமடைந்ததால், பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன் பாலத்தின் இணைப்புகளை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. ஒரு பகுதியை மட்டும் சீரமைத்த நிலையில், மறுபகுதி பணிகள் ஒன்றரை மாதமாக முடங்கியுள்ளது. பணிகள் மேற்கொள்வதற்காக, பெரும் பகுதி சாலையை அடைத்து, சிறிய பகுதி சாலை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், தேசிய நெடுஞ்சாலையில், ஒரு வழிச்சாலையில் பயணிப்பது போல் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பரபரப்பான காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, முடங்கியுள்ள பால இணைப்பு சீரமைப்பு பணிகளை, உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16-Aug-2025