உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இணைப்பு சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

இணைப்பு சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

பள்ளிப்பட்டு: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சமீபத்தில் கட்டப்பட்ட பாலத்தின் இணைப்பு சாலை சேதமடைந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளிப்பட்டு ஒன்றியம் நெடியம் ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கம்பேட்டை. இந்த வழியாக ஆந்திர மாநிலம், புத்துாருக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்தாண்டு, இப்பகுதியில் புதிதாக பாலம் கட்டப்பட்டது. இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையால், இப்பாலத்தின் இணைப்பு சாலை சேதமடைந்துள்ளது. சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு வருவதால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. இணைப்பு சாலையை ஒட்டி தடுப்புச்சுவர் உறுதியாக அமைக்கப்படாததால், மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மழை வெள்ளத்தை தாக்குப்பிடிக்கும் வகையில், கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மார்க்கமாக ஆந்திராவில் இருந்து பள்ளிப்பட்டு பகுதிக்கு கரும்பு லாரிகளும், சோளிங்கரில் இருந்து ஆந்திராவுக்கு இரும்பு உருக்கு பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளும், இரவு - பகலாக சென்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி