உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அகூரில் முருகன் வீதியுலா

அகூரில் முருகன் வீதியுலா

திருத்தணி, திருத்தணி மலைக்கோவிலில் இருந்து, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப் படிகள் வழியாக, மேல்திருத்தணிக்கு நேற்று சுமைத்தாரர்கள் துாக்கி வந்தனர்.பின், அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவர் முருகன் எழுந்தருளி, அகூர் கிராமத்திற்கு, மதியம், 2:00 மணிக்கு சென்றடைந்தார்.பின், அங்குள்ள பெருமாள் கோவிலில், மாலை 5:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமானுக்கு அபிஷேகங்கள் நடந்தன. அதை தொடர்ந்து, மாட்டு வண்டியில் அகூர் கிராம வீதிகளில் உற்சவர் முருகப்பெருமான் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை