மேலும் செய்திகள்
வரதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.32.93 லட்சம்
20-Sep-2024
திருத்தணி,:திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, காணிக்கையாக உண்டியலில் பணம், நகையை செலுத்துவது வழக்கம். பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில், கோவில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில் நேற்று நடந்தது.கடந்த 30 நாட்களில் காணிக்கை வாயிலாக 1 கோடியே 25 லட்சத்து 80 ஆயிரத்து 79 ரூபாயும், திருப்பணி உண்டியல் காணிக்கையாக, 4 லட்சத்து 13 ஆயிரத்து 696 என, மொத்தம் 1 கோடியே 29 லட்சத்து 93 ஆயிரத்து 775 ரூபாய் கிடைத்தது.மேலும், 635 கிராம் தங்கம், 9.485 கிலோ வெள்ளி காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
20-Sep-2024