உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெமிலி ஏரிக்கரை தடுப்பு வேலி சேதம்

நெமிலி ஏரிக்கரை தடுப்பு வேலி சேதம்

திருத்தணி: திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில், நெமிலி ஏரிக்கரை சாலை உள்ளது. இச்சாலை வழியாக, பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் சென்றவாறு இருக்கும்.ஏரிக்கரை சாலை முழுதும் இருபுறமும் வாகன ஓட்டிகள் நலன்கருதி இரும்பு தகடுகளால் தடுப்பு வேலி நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளனர். இதை முறையாக பராமரிக்காததால் தற்போது வேலிகள் உடைந்துள்ளன.மேலும், ஏரிக்கரை சாலையோரம் இருபுறமும் செடிகள் வளர்ந்துள்ளதால், வளைவுகளில் எதிர், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, மாநில நெடுஞ்சாலை துறையினர், சாலையோரம் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, உடைந்த இரும்பு தகடு வேலிகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை