உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகராட்சிக்கு புதிய அலுவலகம் கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம்

நகராட்சிக்கு புதிய அலுவலகம் கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு, 5 கோடி ரூபாயில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு, மதிப்பீடு செய்ய, கவுன்சிலர் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.திருவள்ளூர் நகர்சபை கவுன்சிலர் கூட்டம், தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில், நேற்று நடந்தது. துணை தலைவர் ரவிச்சந்திரன், கமிஷனர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர்.இந்தக் கூட்டத்தில், திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில், சாலை, பாதாள சாக்கடை சீரமைப்பு, சிறுபாலம் உள்ளிட்ட பணிகளை மேம்படுத்த, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டு, 58 ஆண்டு ஆன நிலையில், 5 கோடி ரூபாயில் புதிய அலுவலகம் கட்ட, நகராட்சி நிர்வாக ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.இதையடுத்து, புதிய நகராட்சி கட்டடம் கட்டுவதற்கான வரைபடம், மதிப்பீடு செய்யும் பணிக்கு, நகராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை