மேலும் செய்திகள்
வடசென்னையில் மின் உற்பத்தி நிறுத்தம்
23-Nov-2024
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில், வடசென்னை அனல்மின் நிலையம் ஒன்று மற்றும் இரண்டாவது நிலைகளில், 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றிற்கு அருகே, 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, வடசென்னை -3 அனல்மின் நிலையம், 10,158 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டது. இதை, கடந்த மார்ச் 7ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பின், சோதனை மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. நேற்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிகாரிகளுடன் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்ட பின், சோதனை மின் உற்பத்தி பணிகளை துரிதமாக முடித்து, அடுத்த மாத இறுதிக்குள், முழுமையான மின் உற்பத்தியை துவக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் நந்தகுமார், இயக்குனர் கருக்குவேல் ராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
23-Nov-2024