உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வட சென்னை 765 கி.வோ., துணைமின் நிலையமும் ரெடி

வட சென்னை 765 கி.வோ., துணைமின் நிலையமும் ரெடி

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் மின் வாரியம், 2,780 மெகா வாட் திறனில் மூன்று அனல் மின் நிலையங்கள் அமைத்து வருகிறது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் மாநிலம் முழுதும் எடுத்து செல்லப்பட உள்ளது.இதற்காக, சென்னை அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையம் அருகில், 765/ 400 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணி, 2014ல் துவங்கி சமீபத்தில் முடிவடைந்தது. திட்ட செலவு, 2,510 கோடி ரூபாய்.வட சென்னை துணைமின் நிலையம், 765 கி.வோ., திறன் வழித்தடத்தில், 270 கி.மீ., துாரம் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம், அரியலுார், 765 கி.வோ., துணைமின் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம், அரியலுார் துணைமின் நிலையத்தில் அனைத்து வித சோதனைகளும் முடிந்து, மின்சாரம் கொண்டு செல்வதற்கான, 'சார்ஜிங்' முடிவடைந்தது. தற்போது, வட சென்னை துணைமின் நிலையத்திலும் அனைத்து சோதனைகளும் முடிந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரும், 'சார்ஜிங்' செய்யப்பட்டுள்ளது. அரியலுார் - வட சென்னை வழித்தடம், 5,000 மெகா வாட் மின்சாரம் எடுத்து செல்லும் திறன் உடையது. எனவே, அந்த வழித்தடத்தில் விரைவில் மின்சாரம் எடுத்து செல்லப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை