மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 3 பேர் கைது
26-Mar-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் நிலையம் அருகே நின்றிருந்த வடமாநில வாலிபரை போலீசார் விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணமாக பதில் அளித்தவரை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தபஸ் ஷிகால், 24, என்பதும், விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது.இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், கஞ்சா மற்றும் இரண்டு மொபைல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
26-Mar-2025