உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நர்சிங் பயிற்சி மாணவி தற்கொலை காதலனை கைது செய்ய கோரி போராட்டம்

நர்சிங் பயிற்சி மாணவி தற்கொலை காதலனை கைது செய்ய கோரி போராட்டம்

திருத்தணி: காதலன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், நர்சிங் பயிற்சி பள்ளி மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மாணவியின் உறவினர்கள் காதலனை கைது செய்யுமாறு, உடலை வாங்காமல் திருத்தணி அரசு மருத்துவமனையில் போராட்டம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ஹரிதா,19. இவர் திருத்தணி தனியார் டிப்ளமா நர்சிங் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் நகரி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திலீப்,25, என்பவர், லட்சுமாபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் கோவிந்தம்மா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வர். அப்போது, ஹரிதாவிற்கும், திலீப்புக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளனர். ஒன்றரை வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஹரிதா, திலீபிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதிற்கு திலீப், 'உன்னை திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன்' என கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த ஹரிதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மேலும், அவர் எழுதிய கடிதத்தில், என் இறப்புக்கு 'திலீப் தான் காரணம்' என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, ஹரிதாவின் பெற்றோர், என் மகளின் இறப்புக்கு காரணமான திலீபை கைது செய்யக் கோரி கனகம்மாசத்திரம் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் ஹரிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்தும், ஹரிதாவின் உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம், 'திலீப்பை கைது செய்தால் தான் வாங்குவோம்' என மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் நரேஷ் மற்றும் போலீசார் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சமரசம் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ