உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அச்சுறுத்தும் மெகா இரும்பு பேனரால் பள்ளி நுழைவாயிலில் விபத்து அபாயம்

அச்சுறுத்தும் மெகா இரும்பு பேனரால் பள்ளி நுழைவாயிலில் விபத்து அபாயம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து, சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், அத்திமாஞ்சேரிபேட்டை அடுத்த அண்ணா நகர் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.இதற்காக, இந்த சாலையில் ஒரத்தில் நடப்பட்டிருந்த பெரிய அளவிலான வழிகாட்டி பதாகை தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட வழிகாட்டி பதாகை, 20 அடி நீளத்தில் சாலையில் குறுக்கே உயரத்தில் பொருத்தப்பட்டஇருந்தது. அகற்றப்பட்ட இந்த இரும்பு பதாகை, பல டன் எடை கொண்டது.சாலையில் இருந்து அகற்றப்பட்ட பதாகை, அருகில் செயல்பட்டுவரும் அரசு தொடக்க பள்ளியின் நுழைவாயிலை ஒட்டி கிடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.பள்ளி நுழைவாயில் அருகே வைக்கப்பட்டுள்ள இந்த பதாகையை, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அதையொட்டிய வயல்வெளியில் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை