உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி

பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி

பெரியபாளையம்:வெங்கலில், இருசக்கர வாகனம் மீது, எதிரே வந்த லாரி மோதி ஒருவர் பலியானார். வெங்கல் அடுத்த பாகல்மேடு பெரியகாலனி, பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் முருகன், 50. இவர், நேற்று முன்தினம் இரவு, திருவிழாவிற்கு உறவினர்களை அழைக்க, 'பஜாஜ் டிஸ்கவர்' பைக்கில் கல்பட்டு நோக்கி சென்றபோது, எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த முருகன், சம்பவ இடத்திலேயே பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி