மேலும் செய்திகள்
13 பவுன் நகை மாயம்
02-Nov-2025
திருத்தணி: மாட்டு வண்டி மீது, பைக் மோதியதில், தனியார் நிறுவன ஊழியர் பலியானார். திருத்தணி நகராட்சி, நேரு நகரில் வசித்து வந்தவர் திருநாவுக்கரசு, 27. இவர், திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு, திருநாவுக்கரசு 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் வேலைக்கு சென்றார். இரவு 11:00 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், முருக்கம்பட்டு அருகே வந்த போது, முன்னால் சென்ற மாட்டு வண்டியின் பின்புறம் மோதினார். இதில், திருநாவுக்கரசு சம்பவ இடத்திலேயே பலியானார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Nov-2025