உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த, மஞ்சூர் கண்டிகை பகுதியில் சாலையோரம் உள்ள வேப்ப மரத்திற்கு நேற்று, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பூஜை செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த, 'டாடா ஏஸ்' வாகனம், அந்த நபர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் இறந்தார். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அந்த நபர், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்த சதீஷ், 42, என, தெரிய வந்ததுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை