உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் விளையாட்டு வீரர்கள் ஆர்வம்

திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் விளையாட்டு வீரர்கள் ஆர்வம்

திருவள்ளூர், மாவட்ட விளையாட்டு மைதானத்தில், புதிதாக திறக்கப்பட்ட திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தில், விளையாட்டு வீரர்கள் ஆர்வமாக பயிற்சி பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தில், விளையாட்டு வீரர்களின் வசதிக்காக, தேவையான பல்வேறு நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த உடற்பயிற்சி கூடம், கடந்த 1ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தினமும் விளையாட்டு மைதானத்திற்கு வரும் விளையாட்டு வீரர்கள், நடைபயிற்சி மேற்கொள்வோர் மற்றும் மாணவ - மாணவியர், திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தில் ஆர்வமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை