உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கரிம்பேடில் திறந்தநிலையில் ஆழ்துளை கிணறு

கரிம்பேடில் திறந்தநிலையில் ஆழ்துளை கிணறு

பள்ளிப்பட்டு பள்ளிப்பட்டு அடுத்த, கரிம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது ஞானாம்பிகை உடனுறை நாதாதீஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்கு திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலம், சித்துார் மற்றும் திருப்பதி மாவட்டங்களில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.இந்த தலத்தில் ஏராளமான திருமணங்களும் நடைபெற்று வருகின்றன. கோவில் மண்டபத்திலும், கரிம்பேடு கிராமத்தில் திருமண மண்டபங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், கோவிலின் வடக்கில் சாலையோரத்தில் சமுதாயக்கூடம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தை ஒட்டி பயன்பாட்டில் இருந்து, கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு ஒன்று, மீண்டும் செறிவூட்டும் விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த ஆழ்துளை கிணறு திறந்தநிலையில் உள்ளதால், விபத்து ஆபாயம் நிலவுகிறது.கோவில் திருவிழா நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வரும் சூழலில் விபத்து நேரிடலாம் என்பதால் பக்தர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.பாதுகாப்பு கருதி, ஆழ்துளை கிணறை முறையாக பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ