திருவள்ளூரில் வரும் 8ல் இயற்கை வேளாண் சந்தை
திருவள்ளூர்:திருவள்ளூர் உழவர் சந்தையில், வரும் 8ம் தேதி இயற்கை வேளாண் சந்தை நடைபெற உள்ளது.திருவள்ளூர் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் சசிரேகா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் உழவர் சந்தையில், கடந்த ஏப்., 13 மற்றும் மே 11ம் தேதி இயற்கை வேளாண் சந்தை நடந்தது. வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் இயற்கை விவசாயிகள் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், பொதுமக்கள் ஏராளமானோர் சந்தையை பார்வையிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.ஒவ்வொரு மாதமும் 2வது ஞாயிற்றுக்கிழமை இயற்கை வேளாண் சந்தை நடப்பதை தொடர்ந்து, வரும் 8ம் காலை 9:00 - இரவு 7:00 மணி வரை திருவள்ளூர் உழவர் சந்தை வளாகத்தில் நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை இயற்கை வேளாண் சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் இயற்கை வேளாண் பொருட்களை வாங்கி பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.