உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன், 25. இவர், கடந்த மாதம் 31ம் தேதி மாலை தனது இரு சக்கர வாகனத்தில் கே.ஜி.கண்டிகை பஜார் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.தலையாரிதாங்கல் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே வந்த அரசு பேருந்து ஜெகன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.படுகாயமடைந்த ஜெகனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பின் சென்னை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, ஜெகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்வந்தனர். தொடர்ந்து கண், இதயம் மற்றும் இதய வால்வுகள், நுரையீரல், கல்லீரல், சிறுகுடல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு தானமாக வழங்கப்பட்டது.ஜெகனின் உடல் நேற்று சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்த ஜெகனின் உடலுக்கு திருத்தணி ஆர்.டி.ஓ., கனிமொழி, தாசில்தார் மலர்விழி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !