உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவுடையம்மன் கோவில் நிலத்தில் மணல் கொள்ளை அலட்சிய அதிகாரிகளால் பனை மரங்களுக்கும் ஆபத்து

திருவுடையம்மன் கோவில் நிலத்தில் மணல் கொள்ளை அலட்சிய அதிகாரிகளால் பனை மரங்களுக்கும் ஆபத்து

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த மேலுார் கிராமத்தில் பிரசித்த பெற்ற திருமணங்கீஸ்வரர் திருவுடையம்மன் கோவில் உள்ளது. அதே கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான, 98 ஏக்கர் நிலம் கண்காணிப்பு இன்றி உள்ளது.இங்கு, முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் ஜே.சி.பி., லாரி, டிராக்டர் ஆகியவற்றின் உதவியுடன், தினமும் சவுடு மண் மற்றும் மணல் வெட்டி எடுக்கப்பட்டு, கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.ஐந்து அடி ஆழத்திற்கு சவுடு மண், அதற்கு கீழே உள்ள பகுதிகளில் கிடைக்கும் மணல் ஆகியவை கொள்ளை போகிறது. ஆழமாக மண் வெட்டி எடுக்கப்படுவதால், அங்குள்ள பனை மரங்களுக்கும் ஆபத்து உருவாகி வருகிறது.மண் வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகளில், தற்போது சிறு சிறு குட்டைகள் உருவாகி, அவற்றில் மழைநீர் தேங்கி உள்ளன. தண்ணீர் இல்லாத பகுதியில் மண் திருட்டு தொடர்கிறது.உள்ளூர் ஆளுங்கட்சி, காவல்துறை ஆதரவுடன் தினமும் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க ஹிந்து அறநிலையத்துறையும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதே நிலை தொடர்ந்தால், 98 ஏக்கர் பரப்பில், அங்கு புதிய நீர்நிலை ஒன்று நிச்சயம் உருவாகும் என, வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.மணல் கொள்ளையர்களின் அட்டூழியத்தால், கோவில் நிலம் குவாரியாக மாறி வருவதால், அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ