உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளியை திறக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளியை திறக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் குடிகுண்டா அரசு தொடக்கப் பள்ளியில்,25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கட்டடம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் பள்ளிக் கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் பள்ளி கட்டடத்தை இடித்து அகற்றினர்.மேலும். அதே இடத்தில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ், 28 லட்சம் ரூபாயில், புதியதாக இரண்டு வகுப்பறை கொண்ட கட்டடம் கட்டி முடித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் புதிய பள்ளி கட்டடம் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளதால் மாணவர்கள் அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் படித்து வருகின்றனர்.அங்கு மாணவர்களுக்கு போதிய இட வசதியும், கழிப்பறை வசதியின்றி அவதிப்படுகின்றனர்.எனவே மாணவர்கள் நலன் கருதி மாவட்ட கலெக்டர் குடிகுண்டாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு தொடக்கப் பள்ளி திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை