மேலும் செய்திகள்
குடிநீர் வசதி இல்லாத பயணியர் நிழற்குடை
19-Jan-2025
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 30,000 பேர் வசித்து வருகின்றனர். நகரில், அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த பள்ளிகளில், ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணவர்களும், திருத்தணி சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.திருத்தணி, அத்திமாஞ்சேரிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்து வாயிலாக நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பொதட்டூர்பேட்டைக்கு வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரத்தில், பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி இல்லை. இதனால், வெயில், மழையில், பயணியர் அவதிப்பட வேண்டியுள்ளது.அதே நேரத்தில், பேருந்து நிலைய நிழற்குடையில், ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் ஆபத்தான நிலையில் கட்டி வைக்கப்பட்டு உள்ளன. ஆண்டு முழுதும் இங்கு பேனர்கள் கட்டி வைப்பதில் சிலர் முழுவீசசில் ஈடுபட்டுள்ளனர்.பேனர்கள் கட்டி வைப்பதற்காக மட்டுமே இங்குள்ள நிழற்குடை பயன்பட்டு வருகிறது. இந்த நிழற்குடையால், மாணவ - மாணவியர் மற்றும் பயணியருக்கு எந்தவித பயனும் இல்லை என, பகுதிவாசிகள் தெரிவித்தனர்.;
19-Jan-2025