உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணவூர் ரயில் நிலையத்தில் சூழ்ந்த செடி, கொடிகளால் பயணியர் அச்சம்

மணவூர் ரயில் நிலையத்தில் சூழ்ந்த செடி, கொடிகளால் பயணியர் அச்சம்

திருவாலங்காடு மணவூர் ரயில் நிலையம் செல்லும் வழியில் செடி, கொடிகள் சூழ்ந்துள்ளதால், தினசரி அச்சத்துடன் பயணியர் சென்று வருகின்றனர். சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது மணவூர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் இருந்து, குப்பம்கண்டிகை, மருதவல்லிபுரம், காபுலகண்டிகை, ராஜபத்மாபுரம், ராஜரத்தினாபுரம், பாகசாலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த, 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சென்னை, அரக்கோணம், திருவள்ளூர் நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில், பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமலும், நிலைய வளாகம் பராமரிப்பு இன்றியும் உள்ளது. ரயில் நிலையத்தில், ஒன்றாவது நடைமேடைக்கு செல்லும் வழி மற்றும் நடைமேடையை ஒட்டிய பகுதி, செடி, கொடிகள் சூழ்ந்து உள்ளன. இங்கு, சாரைப்பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால், இரவு நேரங்களில் பயணியர் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மாலை நேரங்களில், நடைமேடைகளில் காத்திருக்கும் பயணியர், சூழ்ந்துள்ள செடி, கொடிகளில் இருந்து வரும் கொசு, பூச்சி தொல்லையால் அவதியுறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ரயில் நிலையத்தை துாய்மையாக வைத்திருக்க, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை