உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  அரசு பேருந்துகளில் ஊர் பெயர் தெரியாமல் பயணியர் தவிப்பு

 அரசு பேருந்துகளில் ஊர் பெயர் தெரியாமல் பயணியர் தவிப்பு

திருவாலங்காடு: திருவாலங்காடு சுற்றுபகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் தடம் எண், ஊர் பெயர் தெரியாததால் பயணியர் தவிக்கின்றனர். அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம், திருவள்ளூர் மண்டலம் சார்பில், திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளில், பின்பக்கம் உள்ள தடம் எண் மற்றும் ஊர் பெயர் பலகையை, பணிமனை ஊழியர்கள் முறையாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து திருவாலங்காடு வழியாக சின்னம்மாபேட்டை வரை இயக்கப்படும் 'டீ-4' என்ற அரசு பேருந்து நேற்று காலை 9:00 மணிக்கு, சின்னம்மாபேட்டையில் இருந்து அரக்கோணம் சென்றது. இப்பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் ஊர் பெயர் பலகை பொருத்தவில்லை. மேலும், பின்பக்கம் ஸ்டிக்கர் வாயிலாக செல்லும் ஊர் பெயரும் ஒட்டப்படவில்லை. இதேபோல், திருவள்ளூர் -அரக்கோணம் இடையே இயக்கப்படும் தடம் எண் '105 சி' என்ற பேருந்தின் பின்பக்கம் உள்ள பெயர் பலகையில் தடம்.9 என்றும், எங்கிருந்து எங்கே செல்கிறது என்ற தகவலும் இல்லை. இதனால் தடம் எண், ஊர் பெயரை பயணியர் முழுமையாக படிக்க முடியவில்லை. இப்பேருந்துகளில் பயணிக்க வேண்டிய பயணியர், பேருந்தை தவற விட்டு விடுகின்றனர். எனவே, திருவள்ளூர் மண்டலம் சார்பில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும், தடம் எண் மற்றும் ஊரின் பெயர் பலகையில் உள்ள எழுத்துகளை பதிக்க வேண்டும், பெயர் பலகையை முறையாக பராமரிக்க திருவள்ளூர் மண்டல அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை