உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோடை வெயிலை குளிர்வித்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

கோடை வெயிலை குளிர்வித்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

திருத்தணி, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் கொளுத்தியது. இதனால், பகல் நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.மேலும், மதிய நேரத்தில் விவசாயிகளும் வயல்வெளியில் பணிகளை தவிர்த்தனர். மூன்று நாட்களாக திருத்தணியில், 102 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. மேலும், அனல் காற்றும் வீசி வருகிறது. இதனால், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தூங்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.நேற்று மாலை 5:30 - 6:30 மணி வரை, திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் திடீர் மழை பெய்தது. மேலும் சில இடங்களில் லோசான காற்றுடன் பலத்த மழை பெய்தது. நேற்று பெய்த மழையால், கோடை வெயிலுக்கு சற்று இதமாக இருந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை