மழைநீர் கால்வாயில் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு
பொன்னேரி:மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் மற்றும் சுகாதார பாதிப்பால், குடியிருப்புவாசிகள் தவித்து வருகின்றனர்.மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தசரதன் நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளின் அருகில் மழைநீர் கால்வாய் உள்ளது. மழைக்காலங்களில் இந்த கால்வாய் வழியாக மழைநீர் வெளியேறி, நீர்நிலைகளுக்கு செல்கிறது.இந்நிலையில், மழைநீர் கால்வாயில் தனிநபர்கள் சிலர் கழிவுநீரை விடுகின்றனர். இரவு நேரங்களில் மோட்டார்கள் உதவியுடன் மழைநீர் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர்.இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அங்குள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைவதை தொடர்ந்து, விவசாயிகள் கால்வாயை மூடிவிட்டனர்.தற்போது, சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்தும், குடியிருப்புகளின் அருகில் தேங்கியும் உள்ளது. இதனால், குடியிருப்புவாசிகள் சுகாதார பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.தனிநபர்கள் சிலர் செய்யும் செயலால், ஒட்டுமொத்த குடியிருப்புவாசிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மழைநீர் கால்வாயில் கழிவுநீர் வெளியேற்றும் தனிநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடியிப்புவாசிகள்,தசரதன் நகர்,தடப்பெரும்பாக்கம்.