உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருமழிசையில் சேதமான சாலை பகுதி மக்கள் கடும் அவதி

திருமழிசையில் சேதமான சாலை பகுதி மக்கள் கடும் அவதி

திருமழிசை, திருமழிசை பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் சேற்றில் சிக்கிய சாலையால் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருமழிசை பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். இந்த கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகள் மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த சாலையில் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் குடியிருப்பு மக்கள், பள்ளி செல்லும் மாணவ- மாணவியர் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை